மே மாதம் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

11 months ago
aivarree.com

கடந்த மே மாதம் மொத்தம் 83,309 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஒரு மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு இலட்சத்துக்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பம் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

எனினும் 2022 மே மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தின் எண்ணிக்கை 175.5 சதவீதம் அதிகமாகும்.

மே மாதம் சுற்றுலா பருவம் இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறெனினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 524,486 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.