முச்சக்கர வண்டி கட்டணங்களும் குறைப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் கிலோ மீட்டாருக்கு 20 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்றைய எரிபொருள் விலை குறைப்பினை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 80 ரூபாவாக மாற்றுவதற்கு முச்சக்கரவண்டி சாரதிகள் அறிவுறுத்தப்படுவார்கள்.

புதிய கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.