மதிப்பற்ற நிலையில் இலங்கையின் கடவுச் சீட்டுகள்

1 year ago
Sri Lanka
aivarree.com

சர்வதேச நாடுகளின் கடவுச் சீட்டு தரப்படுத்தல் புதுப்பிக்கப்பட்டு வெளியாக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கையின் கடவுச் சீட்டு இறுதி 10 நாடுகளில் இடம்பிடித்துள்ளது.

இந்த தரப்படுத்தலின்படி இலங்கையின் கடவுச்சீட்டு 100ஆம் இடத்தில் உள்ளது – விசா இலகுத்தன்மை புள்ளிகள் 41 ஆக உள்ளது.

தரப்படுத்தலில் முதலிடத்தில் ஜப்பானின் கடவுச் சீட்டு உள்ளது.

இலங்கையின் கடவுச் சீட்டானது கொங்கோ குடியரசு, லெபனன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளின் கடவுச் சீட்டுடன் சமப்படுத்தப்பட்டுள்ளது.