பணவீக்கத்தில் இலங்கையை விஞ்சிய பாகிஸ்தான்

11 months ago
World
aivarree.com

பாகிஸ்தானின் வருடாந்த பணவீக்க விகிதம் 2023 மே மாதத்தில் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு புள்ளி விபரத் திணைக்களம் கூறியுள்ளது.

இது பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பிரதான பண வீக்கத்தை விட உயர்வாகும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, பிரதான பணவீக்க விகிதம் 2023 ஏப்ரல் மாதத்தில் 35.3 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 25.2 சதவீதமாக குறைந்துள்ளது.

வியாழனன்று (1) வெளியிடப்பட்ட பாகிஸ்தான் புள்ளி விபரத் திணைக்களத்தின் இந்த அறிவிப்பு தெற்காசிய நாட்டில் பொருளாதார நெருக்கடியை மோசமாக்குகிறது.

ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) முக்கியமான பிணை எடுப்பு பேச்சுக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன மற்றும் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.