டுவிட்டரின் லோகோவை மாற்றிய எலான் மாஸ்க்

1 year ago
World
aivarree.com

முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டரின் லோகோவை திடீரென எலான் மாஸ்க் மாற்றியுள்ளார்.

உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு ஒக்டோபரில் 44 பில்லியின் டொலருக்கு டுவிட்டரை வாங்கினார்.

அதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையிலேயே டுவிட்டர் செயலியின் லோகோவான நீல நிறக் குருவிக்குப் பதிலாக நாயின் படத்தை மாற்றியுள்ளார்.

இந்நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோ மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.