செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் வடகொரியா தோல்வி

10 months ago
World
aivarree.com

தனது முதல் விண்வெளி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியுற்றுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

விண்ணுக்கு ஏவப்பட்ட வடகொரியாவின் செயற்கைக் கோளானது கடலில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கூடிய விரைவில் இரண்டாவது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வடகொரியா கூறியுள்ளது.

இந்த ஏவுதல் தென் கொரிய தலைநகர் சியோலில் ஒரு தவறான எச்சரிக்கையைத் தூண்டியது, அதே நேரத்தில் ஜப்பானில் தெற்கில் உள்ள ஒகினாவாவில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க ஜூன் 11 ஆம் திகதிக்குள் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக பியோங்யாங் முன்னதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.