கோதுமை மா விலை மேலும் குறையுமாம்

1 year ago
Gossip
aivarree.com

சந்தையில் கோதுமை மாவின் விலை வரும் வாரங்களில் மேலும் குறையும் என்று மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 240 ரூபாய் அளவில் நிலவுகிறது.

யுக்ரெய்ன் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக அங்கிருந்து இலங்கைக்கு பெருந்தொகையான கோதுமை மா ஏற்றிய கப்பல் இலங்கையை நோக்கி வருகிறது.

அது இலங்கையில் தரையிறக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் சந்தையில் கோதுமை மாவின் விலை கணிசமாக குறைவடையும் என்று மொத்த விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.