கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா உறுதி | நேரடியாக IMFஇடம் தெரிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையின் கடன்மறுசீமைப்பு தாமதிப்பதன் காரணமாக இலங்கைக்கான உதவிகளை சர்வதேச நாணய நிதியம் தாமதித்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் இந்த உதவி கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களது கடன் மறுசீரமைப்புக்கான உறுதிப்பாட்டை தாமதிப்பதால், அது நடைபெற்றிருக்கவில்லை.

இந்தநிலையில் இந்தியா தற்போது கடன் மறுசீரமைப்புக்கான உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘ஹிரு’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோன்று சீனாவும் விரைவில் இதற்கான இணக்கப்பாட்டை தெரிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சாத்தியமானால், மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.