ஒரே வாரத்தில் 77 பில்லியன் ரூபாய் பங்குச்சந்தையில் நட்டம்

1 year ago
aivarree.com

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கைக்கு கிடைத்ததில் இருந்து இதுவரையில் கொழும்பு பங்குச்சந்தையில் 77 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காலப்பகுதியில் 644.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகள் வெளிச்சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிணையெடுப்பு வசதி கிடைத்ததை அடுத்து, உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அச்சத்தினால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மீதான முதலீடுகளை தவிர்க்க முற்படுவதால், அந்தத்துறை சார்ந்த பங்குகள் கடந்த நாட்களில் கணிசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் இலங்கை தமது பொருளாதார மூலோபாய கொள்கையை முன்வைக்கவுள்ள நிலையில், அதில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெளிப்படும் வரையில், கொழும்பு பங்குச்சந்தையில் இந்த நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அரசாங்கம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய உள்நாட்டு கடன் மறுசீரைமப்பு தொடர்பாகவும், அதன் பாரதூரமான விளைவுகள் தொடர்பாகவும் எளிமையாக விளக்கும் காணொளி ஒன்றை சிரேஸ்ட ஊடகவியலாளரும், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளருமான பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் தமது யூடியுப் செனலில் அண்மையில் பதிவேற்றியிருந்தார்.

கை வைக்க அஞ்சும் அரசாங்கம் | அடுத்த பெரும் நெருக்கடி