உயர்தர பரீட்சை | பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .

இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வழங்கிய தகவல்கள்:-

  • பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரவுத்தளத்திற்குள் பிரவேசித்து பாடசாலை பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்
  • தனியார் பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்
  • அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளவும்.