அடுத்த சில நாட்களில் கோழி இறைச்சியின் விலை குறைப்பு ?

11 months ago
aivarree.com

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் விலையினை குறைப்பதற்கான தீர்வு வழங்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கோழிப்பண்ணை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி விலை குறைப்புக்கான அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 முதல் 1600 ரூபாய் வரை உள்ளூர் சந்தையில் அதிகரித்துள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது.