ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானத்தில் பேட்மேன்

2 months ago
Infotainment
(155 views)
aivarree.com

‘தி டார்க் நைட்’ பேட்மேன் திரைப்பட நடிகர் கிறிஸ்டியன் பேல், ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார்.

விமானத்தில் அவரை வரவேற்றமை குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

2023 ஏப்ரல் 3, அன்று UL 115 விமானத்தில் ஹோலிவூட் நடிகர் கிறிஸ்டியன் பேலை வரவேற்றதாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் கூறியுள்ளது.

அவரது பயணத்தில் அவருக்கு ஒரு மறக்க முடியாத இலங்கை அனுபவத்தை வழங்கியதில் எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விரைவில் அவரை மீண்டும் வரவேற்போம் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை கொழும்பிலிருந்து மாலைத்தீவின் மாலே நோக்கிப் பயணித்த UL 115 என்ற விமானத்தில் கிறிஸ்டியன் பேல் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.