வேனும் பேருந்தும் மோதி விபத்து | குழந்தையும் முதியவரும் பலி (படங்கள்)

6 days ago
Sri Lanka
(407 views)
aivarree.com

மட்டக்களப்பு – வாழைச்சேனை – புனானை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் 3 மாதங்களேயான குழந்தை ஒன்றும், 80 வயதான முதியவர் ஒருவரும் பலியாகினர். 

சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

நானுஓய விபத்து இடம்பெற்று சில தினங்களில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.