வெடுக்குநாறி ஆதிசிவலிங்க உடைப்பு | விசாரணைக்கு உத்தரவிட்டாராம் அமைச்சர் விதுர 

2 months ago
Sri Lanka
(85 views)
aivarree.com

வவுனியா – வெடுக்குநாறி ஆதிசிவலிங்கம் உடைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிபிசி தமிழிடம் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த ஆலய சிவலிங்கம் உடைக்கப்பட்ட விவகாரத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும், இந்த செயலை செய்தவர்களை விசாரித்தறிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

தொல்பொருள் திணைக்களம் மற்றும் வவுனியா பொலிசார் ஆகிய தரப்புக்கு இதற்கான உத்தரவை தாம் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாடில் இருந்த பழமைவாய்ந்த வவுனியா வெடுக்குநாறி ஆதிசிவலிங்கம் உடைக்கப்பட்டமை கடந்த 26ஆம் திகதி தெரியவந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.