வாகன இறக்குமதி பற்றிய அமைச்சரின் புதிய அப்டேட்

2 months ago
Sri Lanka
(606 views)
aivarree.com

எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார வாகனங்களை மாத்திரம் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்ட கருத்துகள்:-

  • வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாட்டுக்கு அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு ஏற்ப மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது.
  • புதிய அமைச்சரவை புதிய வழியில் சிந்திக்கும் அமைச்சரவை.
  • இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவு அளித்தது.
  • இதில் ஹைபிரிட் வாகனங்களையும் பெட்ரோல் கார்களை சேர்க்க சில அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.
  • எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்களை நோக்கி செல்ல வேண்டும் என அரசின் முடிவு செய்துள்ளது.
  • அதனால் இனி இந்த நாட்டில் அரசாங்கம் என்ற வகையில் மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடிவெடுப்போம்.
  • எதிர்காலத்தில் அரசாங்க பயன்பாட்டுக்காக கொண்டுவரப்படும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்கும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.