வர்த்தக அமைச்சராக துடிக்கும் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ | ஜனாதிபதி மறுப்பு

6 days ago
Sri Lanka
(177 views)
aivarree.com

வர்த்தகத்துறை அமைச்சுப் பதவியை தமக்கு தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஜனாதிபதி இதற்கு மறுப்புத் தெரிவித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்பிலிருந்து அய்வரி செய்திப் பிரிவுக்கு சொல்லப்பட்டது.

ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, மகிந்தராஜபக்ச பிரதமராக இருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் வர்த்தக அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

ஏற்கனவே ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகிய இரண்டு பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.