வடக்கில் 120 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு

6 days ago
Sri Lanka
(179 views)
aivarree.com

பலாலி உள்ளிட்ட வடமாகாணத்தின் பல்வேறு இடங்களில் சுவீகரிக்கப்பட்ட சுமார் 120 ஏக்கர் காணித் துண்டுகள், ஃபெப்ரவரி – மார்ச் மாதங்களில் விடுவிக்கப்படவுள்ளன. 

இது தொடர்பாக கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் நடந்த அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பின் கீழ், முப்படையினரின் இணக்கப்பாட்டுடன் குறித்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தின் சமூகவிவகார பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்  தெரிவித்துள்ளார். 

அதேநேரம் வனவள திணைக்களத்தின் கீழ் வர்த்தமானியூடாக சுவீகரிக்கப்பட்ட காணிகளில் விடுவிக்கக்கூடியவற்றை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான காணிகள் பலவற்றுக்கு பொதுக்கள் காணியுரித்தினை கொண்டிருப்பதுடன், மிக நீண்டகாலமாக அவர்கள் அங்கு வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

-தமோர்னிங்-