யாழில் தீக்கிரையாக்கப்பட்ட வர்த்தக நிலையம்

1 year ago
Sri Lanka
aivarree.com

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றைய தினம் (3) வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் தீப்பரவலால் வர்த்தக நிலையம் பெருமளவில் சேதமடைந்துள்ளது.

வர்த்தக நிலையத்துக்கு விஷமிகள் தீ வைத்திருக்கலாமென வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதுடன் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.