மீண்டும் அதிகரிக்கவுள்ள கோதுமை மா விலை

7 days ago
Sri Lanka
(290 views)
aivarree.com

இலங்கையில்  கிலோ 400 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோதுமை மா தற்போது 250-265 ரூபாய் அளவில் கொண்டுவரப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பல இடங்களில் இன்னும் கிலோ 300 ரூபாய் அளவிலும் விற்பனை செய்யப்படுவதாக அய்வரி வாசகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் தற்போது புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை கிலோ 195 – 200 ரூபாவாக நிலவுகிறது.

ஆனால் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் கோதுமை மாவின் மொத்த விற்பனையும் அதன்வழியே சில்லறை விலையும் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று மொத்த விற்பனையாளர்கள் அய்வரிக்கு தெரிவித்தனர்.

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு நிலவுகின்ற தடையை தொடர்ந்தும் பேணுவதற்கு அந்த நாடு தீர்மானித்துள்ளமையே இதற்கான காரணம் என்று தெரிவித்துள்ள அவர்கள், ஆனால் சந்தையில் மாற்றுவழிகளில் கோதுமை மா நிரம்பலாகும் பட்சத்தில், தற்போது இருக்கின்ற நிலையிலேயே விலையை பேண முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.