மதுபானத்தில் மோசடி | நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

2 weeks ago
(335 views)
aivarree.com

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கவுள்ளதாக நிதியமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

மதுபான போத்தல்களில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் மதுவரி ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பெருமளவிலான மதுபான போத்தல்கள் சந்தைக்கு வந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து மதுவரி ஆணையாளர் நாயகம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், இது தொடர்பில் பொலிஸ் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.