மக்களுக்கு தேர்தலில் ஆர்வம் இல்லை | ஜனாதிபதி

1 year ago
Sri Lanka
aivarree.com

பல இளைஞர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் தேர்தல் மற்றும் அரசியலில் நம்பிக்கை இழந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது.

அவர்களில் எவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

எனவே பொருளாதார ‍நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

நுவரெலியாவில் நடைபெற்ற 2023/2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.