புலஸ்தினி மரணித்தமை மரபணு பரிசோதனையில் உறுதி

2 months ago
Sri Lanka
(965 views)
aivarree.com

ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் என நம்பப்படும் புஸ்தினி ராஜேந்திரன் என்ற சாராஹ் ஜெஸ்மின் மரணித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்ட்டர் தாகுதலின் பின்னர் சாய்ந்தமருதில் சஹ்ரான் ஹாசிமின் குடும்பத்தினர் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து மரணித்தனர்.

இதன்போது அவரும் மரணித்துவிட்டார் என மரபணு ஆய்வில் தெரிய வந்திருப்பதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சாராஹ் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக முதலில் கருதப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.