பாழடைந்த காணியில் வீசியெறியப்பட்ட இரத்தினம் | 15 வயதில் தாயான சிறுமி கைது

6 days ago
Sri Lanka
(1003 views)
aivarree.com

ஏறாவூரில் பாழடைந்த காணி ஒன்றில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்று இன்று (24) காலையில் மீட்கப்பட்டது. 

சிசிவை பிரசவித்த 15 வயதான சிறுமி ஒருவரையும் அந்த சிறுமி கருத்தரிக்க காரணமான, சுகாதார அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி இன்று காலை 9 மணியளவில் தனது வீட்டில் குழந்தையை பிரசவித்து, சிசுவை சிறுமியின் வீட்டின் முன்னால் உள்ள பாழடைந்த காணியில் வீசி எறிந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இதனையடுத்து குறித்த சிறுமியையும் அதேபிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஆண் ஒருவரையும் பொலிசார் கைது செய்தனர்.