பாடசாலை விடுமுறை | கல்வி அமைச்சின் அறிவிப்பு

1 week ago
Sri Lanka
(833 views)
aivarree.com

பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடைகிறது.

இதுதொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை 26ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

பின்னர் ஜூன் மாதம் 12ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம்மாதம் 29ம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

அய்வரி வட்சப் குழுவில் இணைக