பனாமா-கொலம்பியா எல்லைக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

1 week ago
World
(22 views)
aivarree.com

பனாமா மற்றும் கொலம்பியாவின் எல்லைக்கு அருகில் உள்ள டேரியன் வளைகுடாவில் புதன்கிழமை (24) மாலை 6.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கத்தை அடுத்து ஒன்பது நிமிடங்களுக்குப் பின்னர், அதே இடத்தில் 4.9 மெக்னிடியூட் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) கூறியது.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக உண்டான சேத மற்றும் காயங்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

முதலில் பதிவான நிலநடுக்கத்தின் மையம் பனாமாவின் போர்டோ ஒபால்டியாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவு என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.