Updated | நேபாள விமான விபத்து | 68 பயணிகளும் பலி

1 year ago
World
aivarree.com

மத்திய நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் பயணித்த 68 பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

எட்டி ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் இருந்து சென்று பொக்ராவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்தது.

விமானத்தில் 10 வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உட்பட 68 பயணிகள் இருந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.