தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையாளருக்கே சந்தேகம்

7 days ago
Sri Lanka
(242 views)
aivarree.com

தேர்தல் நடைபெறுமா என்பதில் தமக்கே சந்தேகம் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம் தேர்தல் தினத்தை தாங்கள் நிர்ணயிக்கவில்லை என்றும், தெரிவத்தாட்சி அதிகாரிகளே அதனை நிர்ணயித்த நிலையில் தாங்கள் அதைற்கு இணக்கப்பாட்டை தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் தேர்தல் திகதி நிர்ணயமானது அரசாங்கத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அல்ல என்றும், அது அரசியல் யாப்பில் இருக்கின்ற அதிகாரத்துக்கு உட்பட்டதே என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.