கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பாஸ் போட்டா’ என்ற சமன் ரோஹித உள்ளிட்ட குழுவினர் மீது இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.