தங்க விலை மேலும் வீழ்ச்சி

12 months ago
aivarree.com

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய சந்தை நடவடிக்கைகளின் படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 15 டொலர்களால் வீழ்ச்சியடைந்து இப்போது 1945 டொலர்களாக நிலவுகிறது. 

அமெரிக்க பொருளாதார ஸ்திரநிலை தொடர்பான ஐயங்கள், தங்க விலை வீழ்ச்சிக்கான முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது. 

இந்த விலை வீழ்ச்சியானது, இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று (25) கொழும்பு செட்டியார்த்தெருவில் தங்கம் 2000 ரூபாயால் குறைந்து, 24 கறட் பவுன் 166,000/- ஆகவும் 22 கறட் பவுன் 152,166/- ஆகவும் நிலவின.