தங்க விலை நிலவரம் 

1 year ago
aivarree.com

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் ஓரளவு அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 7  டொலர்களால் அதிகரித்து 1976.87 டொலர்களாக பதிவாகி இருக்கிறது.

கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலையானது 25.64 டொலர்கள் குறைவடைந்துள்ளதையும் காணக் கூடியதாக இருக்கிறது.

இதேவேளை இலங்கையில் நேற்று தங்கத்தின் விலை 2000 ரூபாவால் குறைவடைந்திருந்தது. 

நேற்றைய நாளில் கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் ஒரு பவுணின் விலை 168,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 155,400 ரூபாவாகவும் பதிவாகி இருந்தது.