சுன்னாகத்தில் பட்டப் பகலில் பதற்றம்| வாகனங்களால் மோதி தாக்குதல் | நால்வர் வைத்தியசாலையில்

6 days ago
Sri Lanka
(783 views)
aivarree.com

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாகத்தில் நபர் ஒருவரை தாக்கும் நோக்கில் பட்டா ரக வாகனத்தில் வந்த குழுவினர் அவர் பயணித்த காரை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனனர்.

பின்னர் அவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில் அனைவரும் பார்த்திருக்க இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.