சாகல ரத்நாயக்கவுக்கு புதிய பதவி

1 year ago
Sri Lanka
aivarree.com

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கொழும்பு – மேற்குக்கான கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் மாத்தறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

சாகல ரத்நாயக்க தற்போது ஜனாதிபதியின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராகவும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாகவும் உள்ளார்.