சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்திய புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழா

1 week ago
World
(67 views)
aivarree.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (28) புதி டெல்லியில் புதிய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியினை திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வினை குறைந்த பட்சம் 20 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதற்குத் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (25) மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் புதன்கிழமை ஒரு கூட்டறிக்கையில், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய பாராளுமன்றத்தைத் திறக்க வேண்டும் என்றும், நாட்டின் முதல் பழங்குடியின அரச தலைவரை மோடி ஓரங்கட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.