கால்பந்து தடை | ஜெய் ஸ்றீ ரங்கா தெரிவித்த விடயம்

6 days ago
SPORTS
(222 views)
aivarree.com

இலங்கையின் கால்பந்து சம்மேளனத்துக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் விதித்துள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுத்துவருவதாக அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெய் ஸ்றீ ரங்கா தெரிவித்துள்ளார்.

ரங்கா இந்த சம்மேளனத்தின் புதிய தலைவராக கடந்த 16ம் திகதி தெரிவு செய்யப்பட்ட நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளன விதிமுறைகளை மீறியதற்காக, இலங்கைக்கு ஃபிஃபாவினால் தடை விதிக்கப்பட்டது.

புதிய நியமனங்கள் தொடர்பாக உடனடியாக இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் ஃபிஃபாவுக்கு அறிவிக்காமையே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த தினம் அதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவாக இந்த தடையை நீக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்றீ ரங்கா தெரிவித்துள்ளார்.