கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு நேர்ந்த கதி

1 year ago
Sri Lanka
aivarree.com

2 கிலோ கிராம் கேரள கஞ்சாவை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.