ஓய்வு பெற்றார் முரளி விஜய்

2 months ago
SPORTS
(119 views)
aivarree.com

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் முரளி விஜய் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று, மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“2002-2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகளாகும்.

ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையாகும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ), சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் செம்ப்ளாஸ்ட் சன்மார் ஆகியன எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், எனவும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.