ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஆக உயர்வு

11 months ago
World
aivarree.com

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம் விபத்தில் 900க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்றாக தற்சமயம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தினை பார்வையிடுவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் மோடி முதலில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவார் என்றும், பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு செல்வார் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் உறுபடுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.