எல்விஸ் ப்ரெஸ்லியின் மகளும் மைக்கல் ஜெக்சனின் முன்னாள் மனைவியுமான லிசா காலமானார்

3 weeks ago
World
(115 views)
aivarree.com

உலகப் புகழ்பெற்ற ரொக் எண்ட் ரோல் கலைஞர் எல்விஸ் ப்ரெஸ்லியின் ஒரே மகளான லிசா மேரி ப்ரெஸ்லி (Lisa Marie Presley) 54 வயது மாரடைப்பினால் காலமானார்.

வியாழக்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் காலமானதாக அவரது தாயார் ப்ரிசிலா ப்ரெஸ்லி அறிவித்துள்ளார்.

1968ஆம் ஆண்டு பிறந்த லிசா, தமது தந்தையின் வழியில் இசைத்துறையில் கால்தடம் பதித்து, 3 அல்பம்களை வெளியிட்டுள்ளார்.

திருமண வாழ்க்கையில் சர்ச்சைக்குள்ளான அவர், மறைந்த பொப்பிசை ஜாம்பவான் மைக்கல் ஜெக்சன், நடிகர் நிக்கலொஸ் கேஜ், இசைக்கலைஞர்களான டெனி கியோக் மற்றும் மைக்கல் லொக்வுட் ஆகியோரை வௌ;வேறு காலக்கட்டங்களில் மணந்திருந்தமை குறிப்பிடத்தக்குது.