எரிபொருள் எண்ணெய் விலையில் கடும் உயர்வு

1 week ago
(553 views)
aivarree.com

உலக சந்தையில் கடந்த 4ஆம் திகதி முதல் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது. 

தற்போது ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 1.71% விலை அதிகரித்து 87.63 டொலராக உள்ளது. 

அமெரிக்காவின் WTI வகை மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 1.28% விலை அதிகரித்து 81.64 டொலராக நிலவுகிறது. 

மர்பன் மசகெண்ணெய்யும் பீப்பாய்க்கு 1.68% விலை அதிகரித்து 86.69 டொலராக உயர்ந்துள்ளது.