இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தங்க ஆபரணங்களின் விலையில் சிறியளவு சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
கொழும்பு செட்டியார்த் தெரு நகை விற்பனையாளர் ஒருவர் அய்வரி செய்திகளிடம் இதனைத் தெரிவித்தார்.
இன்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் 192,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் 175,872 ரூபாவாகவும் நிலவுகிறது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை பவுணுக்கு 1500 ரூபா அளவில் குறைவடைந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இன்னும் சற்று குறைவடையக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.