ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் அகால மரணம்

2 months ago
Sri Lanka
(434 views)
aivarree.com

கிளிநொச்சி பிராந்தியத்தில் ஊடகவியலாளராக செயற்பட்ட எஸ்.என். நிபோஜன், ரயில் விபத்தில் அகால மரணமடைந்தார்.

தெஹிவளையில் ரயிலில் மோதுண்டு அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து பல்வேறு வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களுக்கு அவர் செய்திகளை வழங்கி வந்தார்.

அண்மையில் யூடீயூப் ச்செனல் ஒன்றை ஆரம்பித்து அதில் முழுநேரமாக கவனம் செலுத்தி வந்த நிலையிலேயே அவரது அகால மரணம் சம்பவித்துள்ளது.