உள்ளூராட்சி தேர்தல் | தசுன் ஷானக விடுத்துள்ள அவசர அறிவிப்பு

2 months ago
SPORTS
(376 views)
aivarree.com

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு தொடர்பும் தமக்கு இல்லை என இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் தசுன் ஷானக அறிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் பதிவொன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் தமது படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தனக்கு எந்தக் கட்சியுடனும் தொடர்புகள் இல்லை, என்று கிரிக்கெட் வீரர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதே தனது உண்மையான அன்பும் ஆர்வமும் எனவும் தசுன் ஷானக மேலும் தெரிவித்துள்ளார்.