இலங்கைக்கான உதவி | IMF வழங்கிய அப்டேட்

8 months ago
aivarree.com

இலங்கை சுமார் 2.9 பில்லியன் டொலர்களை உதவியாக பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு இந்தியா சீனா போன்ற கடன் வழங்கு நாடுகளின் ஒப்புதல் தேவை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தமது இணக்கப்பாட்டை இந்தியா தெரிவித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தி உள்ளது.

ஏனைய கடன் வழங்குனர்களும் இலங்கை அதிகாரிகளும் தங்களுடைய இணக்கப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு இலங்கைக்கு உதவி வழங்கும் வேலை திட்டம் சமர்ப்பிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய தகவல்களை மேற்கோள்காட்டி ஹிரு நியூஸ் ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.