இந்தாண்டின் 20 நாட்களில் இலங்கை ரூபாய் வீழ்ச்சி

1 week ago
(280 views)
aivarree.com

இந்த வருடத்தின் முதல் 20 நாட்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 0.3 சதவீதம் உயர்ந்துள்ளது. 

ஆனால் ஏனைய நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 

நாணய மாற்று விகித நகர்வுகளின் அடிப்படையில், இந்த காலகட்டத்தில் யூரோவிற்கு எதிராக இலங்கை ரூபாய் 1.5 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்டுக்கு எதிராக 2.5 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு எதிராக 1.6 சதவீதமும், ஜப்பானிய யென்னுக்கு 2.6 சதவீதமும் சரிந்ததுள்ளது.