ஆறு மாதங்களுள் கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் மத்திய வங்கி ஆளுநர்

1 year ago
Sri Lanka
aivarree.com

அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ரொய்டர்ஸ் ஊடகத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்துகள்.

  • கடன் மீளளிப்புகளுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் உதவித்திட்டம் கிடைத்ததும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.
  • இதற்கான பேச்சுவார்த்தைகளை ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும்.
  • கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாடு ஏற்பட்டதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மீள் தடமேறும்.