கணக்கில் காட்டாத தங்கத்துடன் விமான நிலையத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் குறித்த புதுப்பிக்கப்பட்ட விபரங்களை சுங்கத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 3.397கிலோ தங்கத்துக்கு மேலதிகமாக, கைப்பேசிகள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.
அவரிடம் இருந்து 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 91 திறன்பேசிகள் (Smartphone) மீட்கப்பட்டதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

