புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி குழு சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றுமுன்தினம் (23) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து Fly Dubai விமானம் FZ547 இலிருந்து இலங்கைக்கு வந்த, விசேட நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாயில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டார்.
இதன்போது, அவரது பயண பொதிகளை சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 74 மில்லியன் பெறுமதியான 3 கிலோ 397 கிராம் நிறை கொண்ட தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகள் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான 91 ஸ்மார்ட் போன்கள் மீட்கப்பட்டன.
பின்னர் சுங்க அதிகாரிகளால் 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

