அரச பணியாளர்களின் வேதனத்தை வழங்க 6 பில்லியன் பற்றாக்குறை

6 days ago
Sri Lanka
(241 views)
aivarree.com

அரச பணியாளர்களது வேதனத்தை வழங்குவதற்கு 6 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசத்துறையில் நிறைவேற்று அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கும், ஏனையோருக்கும் இரண்டு கட்டங்களாக வேதனத்தை வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி நாளையதினம் (25) வேதனம் வழங்கப்படும் தினமாக இருந்தாலும், மொத்தமாக தேவையாக உள்ள 93 மில்லியன் ரூபாவில் 87 பில்லியன் ரூபாவே அரசாங்கத்திடம் அரசத்துறை வேதனத்துக்காக திரட்ட முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நாளையதினம் நிறைவேற்று தரத்தில் அல்லாத பணியாளர்களுக்கான வேதனம் வழங்கப்படும் என்றும், நிறைவேற்று தரத்திலுள்ள அதிகாரிகளின் வேதனம் ஒருநாள் தாமதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய தினத்துக்குள் 6 பில்லியன் ரூபாவை அரச வங்களில் இருந்து நிதியமைச்சினால் திரட்ட முடியுமாக இருந்தால், நாளையதினம் நிறைவேற்று மட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கும் வேதனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.